நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம் என திருச்சி எஸ்.பி வருண் குமார் தெரிவித்துள்ளார்.
சண்டிகர் மாநிலத்தில் நடைபெற்ற 5-வது ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி வருண் குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது, சைபர் கிரம், இணையதள குற்றங்கள், மிரட்டல்களை கண்காணிப்பது, அவற்றை எவ்வாறு தடுப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆதாரங்களுடன் விரிவாக விளக்கம் அளித்தார்.
நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம் என தெரிவித்தார். நாதக-வால் தானும், தனது குடும்பத்தாரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இணையதள குற்றங்கள் செய்யும் கூலிகளை கண்காணிக்க 14C என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என எடுத்துரைத்தார்.