சென்னை பட்டினப்பாக்கத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் பால்கனி மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.
ஸ்ரீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த குலாப், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தனது வீட்டின் அருகேயுள்ள மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் பால்கனியின் மேற்கூரை இடிந்து குலாப் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குலாப் உயிரிழந்தார்