ஓமன் நாட்டில் நடைபெற்ற ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
10-வது ஜூனியர் ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. 10 அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் அரையிறுதி ஆட்டங்களில் இந்திய அணி 3 – 1 என்ற கோல் கணக்கில் மலேசியாவையும், பாகிஸ்தான் அணி 4 – 2 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு தொடரில் தோல்வியே கண்டிராத இந்தியாவும், பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதின.
தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில், இந்திய அணி 5 – 3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.