தஞ்சையில் திருமண மண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்று மொய் பணம் செலுத்தியவர்களுக்கு டிஜிட்டல் முறையில் ரசீது வழங்கப்பட்டது.
புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபத்தின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்கள் மொய் பணம் செலுத்த வசதியாக, தனி கவுண்டருடன் கூடிய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
மேலும் லேப்டாப், பணம் எண்ணும் இயந்திரம்,ரசீது தரும் இயந்திரம் ஆகியவற்றின் உதவியோடு மொய் பணம் செலுத்தியவர்களுக்கு ரசீது வழங்கப்பட்டது. அதில் பணம் செலுத்தியவர்களின் பெயர், ஊர், விலாசம் மற்றும் செலுத்திய தொகை ஆகிய விவரங்களுடன் கூடிய டிஜிட்டல் ரசீது உடனுக்குடன் வழங்கப்பட்டது. இதனால், விழாவிற்கு வந்தவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.