இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை பாதை நிறைவுபெற்றுள்ளதாக மத்திய ரயில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி தையூர் வளாகத்தில் ஹைப்பர் லூப் பாதை, சோதனை ஓட்டத்திற்காக 410 மீட்டர் தொலைவிற்கு கட்டமைக்கப்பட்டு வந்ததது.
தற்போது சோதனை பாதை நிறைவு பெற்றுள்ள நிலையில், தமது எக்ஸ் தள பக்கத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாட்டின் முதல் ஹைப்பர்லூப் சோதனை பாதை நிறைவுபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.