தேச விடுதலை, சம உரிமைக்கு அம்பேத்கர் ஆற்றிய தியாகங்களை நினைவு கூர்வோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், “இந்திய அரசியலைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் மற்றும் சுதந்திர இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சர், ‘பாரத ரத்னா’ அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் இன்று.
தனது இளமைக் காலம் தொட்டே, சமூகத்தில் நிலவி வந்த தீண்டாமை எனும் கொடிய நோயை இம்மண்ணிலிருந்து அகற்ற வேண்டுமென்பதில் தீர்க்கமானவராக இயங்கியவர்.
ஒடுக்கப்பட்ட மனிதர்களாய் நடத்தப்பட்டவர்களின் உரிமை மீட்டெடுக்கின்ற வகையிலும், அனைவரும் சமம் என்கிற நோக்கிலும் சமூகநீதி கொண்ட சட்டமியற்றுவதில் உறுதி கொண்டிருந்தார்.
அனைவராலும் ‘பாபா சாகேப்’ என்று அன்போடு அழைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களின் இன்றைய நினைவு தினத்தில், தேசத்தின் விடுதலைக்கும், மனித சம உரிமைக்கும் அவராற்றிய தியாகங்களை பணிவோடு நினைவு கூர்வோம்” என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.