ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக தொடரும் என கூறினார்.வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டியில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும்,
ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யப்படாததால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது எனவும் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.
ரெப்போ வட்டி விகிதத்தில் 11-வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.