தேர்தல் அரசியலில் சட்டமேதை அம்பேத்கரை காங்கிரஸ் திட்டமிட்டு தோற்கடித்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, சென்னை ராஜ்பவனில் அவரது உருவபடத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் பேசிய அவர், அம்பேத்கர் வாழ்ந்த நாட்களில் அவருக்கு எதிரிகளே இல்லை என்றும், பன்முகத்தன்மை வாய்ந்த அவர் சுதந்திரத்துக்குப் பின் வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டதாகவும் வேதனை தெரிவித்தார்.
தேர்தல் அரசியலில் களமிறங்கிய அம்பேத்கரை அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டு தோற்கடித்ததாகவும் ஆளுநர் குற்றம்சாட்டினார்.