ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் சிவன் கோயிலில் நடிகர் நாக சைதன்யா – சோபிதா தம்பதி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
நடிகர்கள் நாக சைதன்யா – சோபிதா துலிபாலா திருமணம் புதன்கிழமை ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் இருவரும் ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது அவர்களுடன் நாகார்ஜூனா உள்ளிட்டோரும் உடனிருந்தனர். வழிபாட்டிற்கு பிறகு, அவர்களுடன் ஏராளமானோர் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.