புதுச்சேரி அடுத்த சேதராபட்டு நீலாவதி அம்மன் கோயில் கும்பாபிஷே விழா கோலாகலமாக நடைபெற்றது.
நீலாவதி அம்மன் கோயிலின் கும்பாபிஷேக பெருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பின்னர், கோயில் கலசங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அன்னதானம் வழங்கினார்.