ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மிட்செல் ஸ்டார்க்கின் மிரட்டலான பந்து வீச்சால் 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 180 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில், அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ், ஸ்காட் போலான்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.