உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி அருகே ராட்சத ராட்டினத்தில் அந்தரத்தில் தொங்கிய ஒன்பது வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.
ராட்டினத்தில் அவர் உற்சாகமாக ஏறியதும் திடீரென இடறி அதன் கம்பியை பிடித்து சுமார் 60 அடி உயரத்தில் தொங்கினார். இதை நேரில் பார்த்தவர்கள் பதைபதைப்பில் ஆழ்ந்தனர். இதையறிந்த ராட்டின ஆபரேட்டர்கள், உடனடியாக இயல்பு நிலைக்கு கொண்டு வந்து சிறுமியை மீட்டனர்.