இலவச வேட்டி சேலை ரகங்கள் உற்பத்திக்கான கூலியை உடனடியாக வழங்கவேண்டும் என விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டை தாரர்களுக்கு அரசு நியாய விலை கடையின் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பாக இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கப்படுகிறது.
இதற்காக ஓரு கோடியே 77 லட்சத்து 22 ஆயிரத்து 995- வேட்டிகளும், ஓரு கோடியே 77- லட்சத்து 64 ஆயிரத்து 471 சேலைகளும் கைத்தறி நெசவாளர் மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலமாகவும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நடப்பு 2025- ம் ஆண்டுக்கான இலவச வேட்டி சேலை உற்பத்தியில் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இலவச வேட்டி சேலை உற்பத்தி பணிகள் விசைத்தறி கூடங்களில் தொடங்கியுள்ளது.