ஈரோடு அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பவானி காளிங்கராயன் பாளையத்தில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, செல்போன் டவர் ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும், பாதுகாப்பு கருதி அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.