கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையர் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 04 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 13ஆம் தேதி அண்ணாமலையர் கோயிலின் முன் பரணி தீபமும் அதை தொடர்ந்து திருவண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு 16 ஆயிரம் போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதால், அவர்கள் தங்குவதற்கு 156 பள்ளிகள் பயன்படுத்தப்பட உள்ளன. இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 156 பள்ளிகளுக்கு இன்று முதல் 16 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.