சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 1984ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் 40வது ஆண்டாக சந்தித்துக்கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 120க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். நண்பர்களை சந்தித்ததால் மகிழ்ச்சியடைந்த அனைவரும், தங்களது பழைய நினைவுகளை பரிமாறிக் கொண்டனர்.
மேலும், தாங்கள் பயின்ற 1984ஆம் ஆண்டை குறிக்கும் வகையிலான சின்னம் பொறித்த சிவப்பு நிற டி-ஷர்ட் அணிந்து நண்பர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதே போல், பெண்களும் ஒரே வண்ணத்தில் சேலை அணிந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
என்றும் மாறாமல் மனதில் இருக்கும் கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்த பின்னர் அனைவரும் ஒன்றாக இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.