எல்லை பாதுகாப்பு படையின் 60வது ஆண்டு விழாவை ஒட்டி நடைபெற்ற அணிவகுப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்வையிட்டார்.
எல்லை பாதுகாப்பு படை கடந்த 1965ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி உருவாக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரத்தில் அதன் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.
அதன்படி இந்தாண்டு எல்லை பாதுகாப்பு படையின் 60வது ஆண்டுவிழா கொண்டாடப்படும் நிலையில், ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் நகரில் எல்லை பாதுகாப்பு படையின் அணிவகுப்பு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 3 ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளை கொண்ற BSF வீரர்களுக்கு அமித்ஷா பாராட்டுக்களை தெரிவித்தார்.