திருப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்களின் கைரேகை மற்றும் ஆதார் அட்டை விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த செர்மலை கவுண்டம்பாளையத்தில் கடந்த 29 -ஆம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், அவர்களது வீட்டில் இருந்து 8 சவரன் நகைகளையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக 14 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்கொலையில் வெளிமாநில நபர்கள் சம்பந்தப்பட்டு இருப்போர்களோ என்ற சந்தேகத்தின் பேரில், அவர்களது ஆதார் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
இதேபோல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வெளிமாநிலத்தவரின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.