மயிலாடுதுறை தருமபுரம் 26-வது ஆதீனகர்த்தர் குருபூஜை விழா!
Sep 18, 2026, 12:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயிலாடுதுறை தருமபுரம் 26-வது ஆதீனகர்த்தர் குருபூஜை விழா!

Murugesan M by Murugesan M
Dec 8, 2024, 03:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மயிலாடுதுறையில் தருமபுரம்  26-வது ஆதீனகர்த்தர் குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதில் அரும்பங்காற்றும் ஆதீனங்களில் முக்கியமானது மயிலாடுதுறையில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனம். இந்த ஆதீனத்தின் 26-வது குருமகா சன்னிதானமாக 48 ஆண்டுகள் அருளாட்சி செய்தவர் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.

இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் அஷ்டமி திதி அன்று பரிபூரணம் எய்தினார். அவரது பூதவுடல் ஆதீன மடத்தின் அருகில் ஸ்ரீஆனந்த பரவசர் பூங்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டு, தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் விமான வடிவில் குரு மூர்த்தம் அமைக்கப்பட்டுள்ளது. இவரது ஐந்தாம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடைபெற்றது.

இதையொட்டி இன்று காலைமுதல் ஆதீனத்தில் திருமுறை பாராயணம், சமய சொற்பொழிவு, சிந்தனை அரங்கம், திருமுறை விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

குரு மூர்த்தத்தில் நடைபெற்ற விழாவில், ஆதீனத்தின் தற்போதைய குரு மகா சன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு, குருமூர்த்த ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து மகாதீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.

தொடர்ந்து சிறந்த சைவப் பணியாற்றிய ஓதுவார் ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டது.

Tags: MayiladuthuraiDharmapuramAtheenakartha Guru Pujahanmuga Desika Gnanasambandha Paramasarya Swamigal
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை அழகர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தரிசனம்!

Next Post

திருப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்களின் கைரேகை, ஆதார் அட்டை விவரம் சேகரிப்பு – போலீசார் தீவிரம்!

Related News

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Load More

அண்மைச் செய்திகள்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies