தமிழகத்தில் ஐயப்ப சுவாமியை இழிவுபடுத்திய இசைவாணியை கைது செய்யாமல், அந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை கைது செய்ய முயற்சி நடப்பதாக, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளனர்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஸ்தூரி பேச்சை திரித்து வெளியிட்டு அவரை தீவிரவாதி போல் கைது செய்தார்கள்.பிராமணர்களுக்கு ஆதரவாக பேசினாலே இது தான் நடக்கும் என்பதற்கு கஸ்தூரி கைது ஒரு உதாரணம் என தெரிவித்தார்.
ஈசா மையத்திற்கு ஆதரவாக பேசிய ஓம் கார் பாலாஜி கைது செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். இசைவாணி என்கிற பாடகி ஐயப்ப பக்தர்களை புண்படுத்தும் வகையில் பாடல் பாடினார் அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை ஆனால் அந்த பாடலுக்கு எதிராக பாடல் பாடினால் அதை பாடியவர்களை கைது செய்ய முயற்சி நடப்பதாகவும் அவர் சாடினார்.
ஹெச்.ராஜாவிற்கு தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிராமணர்களுக்கு எதிராக பேசியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தான் புதிய சட்டம் இயற்ற காலதாமதமாகும் என்பதால் தற்போது இருக்கும் சட்டத்தை பயன்படுத்தி பிராமண சமூகத்தை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழக காவல் துறை ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை, திராவிட சித்தாந்தங்கள் பேசுபவர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஜனவரி 5 ஆம் தேதி மதுரையில் பிராமண சமூகத்துடன் இணைந்து அடையாள உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் அவர் கூறினார்.
ஸ்டாலின் அரசு அண்ணா, கருணாநிதி வழியில் நடக்கவில்லை பெரியார் வழியில் தான் செயல்படுகிறது. திராவிட மாடல் ஆட்சியை வேறு யாரோ இயக்குகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் சனாதான ஆதரவு வழக்கறிஞர்கள் குழு உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.