மன்னர் ஆட்சி, வாரிசு அரசியல் குறித்தெல்லாம் பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு என்ன தகுதி உள்ளது என, அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது மன்னராட்சி கிடையாது, அது மக்களாட்சி என தெரிவித்தார்.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் அம்பேத்கரை பற்றி பேசாமல் வாரிசு அரசியல் பற்றி பேசப்பட்டதாக தெரிவித்த அவர், உதயநிதியை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை என கூறினார்.