திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே, சரக்கு லாரி மோதி ரயில்வே கேட் சேதமடைந்ததால், சிக்னல் கிடைக்காமல் ரயில் நடுவழியில் நின்றது.
செட்டியபட்டி ஊருக்குள் செல்லும் சாலையில் ரயில்வே கேட் ஒன்று உள்ளது. அந்த வழியாக வந்த சரக்கு லாரி ஒன்று மோதியதில், ரயில்வே கேட் சேதமடைந்து கீழே விழுந்தது. இதனால், கோவையில் இருந்து நாகர்கோயில் சென்ற பயணிகள் விரைவு ரயில், சிக்னல் கிடைக்காமல் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
பின்னர் அம்பாத்துரை ரயில் நிலைய அதிகாரியின் ஒப்புதல் கிடைத்த பிறகு சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.
இதனால் ரயில்வே கேட்டின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.