மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தலைவராக ராகுல் நரவேகர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
பாஜகவை சேர்ந்த அவர், மும்பை கொலபா சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்வானார். அவர் இரண்டாவது முறையாக மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தலைவராக தேர்வாகியுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வென்று கடந்த வாரம் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.