மகாராஷ்டிர மாநிலம் புனே பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதியில் உள்ள பழைய பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென பற்றி எரிந்ததால், அங்கு கரும்புகை சூழ்ந்தது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் ஆறு வாகனங்களில் வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.