திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புதிய ஒருவழி சாலையை மாற்றக்கோரி 500க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரபல சுற்றுலா தலமான கொடைக்கானலில் சாலையோரங்களில் பல வித கடைகளை அமைத்து வியாபாரிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சுற்றுலா தலங்களில் இருந்து ஏரிச்சாலை வருவதற்கான ஒரு வழிப்பாதை மாற்றப்பட்டது.
இதனால் வியாபாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதகாவும், வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், புதிய ஒரு வழிபாதையை மாற்ற தமிழக அரசை வலியுறுத்தி, 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கருப்பு கொடியேற்றி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.