திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு தனியார் வங்கி ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தோமையார்புரம் மேடு பகுதியில் உள்ள குப்பை கிடங்கு அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலை செய்யப்பட்டவர் சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பதும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
உடலை கைபற்றிய போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.