இந்தியா கண்டுள்ள முன்னேற்றம் ஒவ்வொரு துறையிலும் காணப்படுகிறது! - பிரதமர் மோடி
Aug 19, 2025, 07:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா கண்டுள்ள முன்னேற்றம் ஒவ்வொரு துறையிலும் காணப்படுகிறது! – பிரதமர் மோடி

ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்!

Web Desk by Web Desk
Dec 9, 2024, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திறன் பெற்ற தொழிலாளர்கள், விரிவடைந்து வரும் சந்தை ஆகியவற்றின் காரணமாக முதலீட்டுக்கான முக்கிய இடமாக ராஜஸ்தான் உருவெடுத்து வருகிறது எனப்  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், பிரதமர்  நரேந்திர மோடி இன்று “எழுச்சி பெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாடு 2024” மற்றும் ராஜஸ்தான் உலகளாவிய வர்த்தகக் கண்காட்சியை  ஜெய்ப்பூர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் தொடங்கி வைத்தார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,

இந்தியாவின் வர்த்தகச் சூழல் வர்த்தக வல்லுநர்களையும் முதலீட்டாளர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளதாகவும்  செயல்பாடு, மாற்றம் மற்றும் சீர்திருத்தம் ஆகிய தாரக மந்திரத்துடன் இந்தியா கண்டுள்ள முன்னேற்றம் ஒவ்வொரு துறையிலும் காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் 11-வது பெரிய பொருளாதார நாடாக மட்டுமே இந்தியாவால் உயர முடிந்துள்ளது என்று தெரிவித்தார். ஆனால் கடந்த பத்தாண்டுகளில், இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதி கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது என்று கூறினார். 2014-க்கு முந்தைய பத்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த பத்தாண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்று  கூறினார். இந்தியாவின் உள்கட்டமைப்பு செலவினம், கிட்டத்தட்ட ரூ 2 டிரில்லியனில் இருந்து ரூ .11 டிரில்லியனாக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

“ஜனநாயகம், மக்கள்தொகையியல், டிஜிட்டல் தரவு, விநியோகம் ஆகியவற்றின் உண்மையான சக்தியை இந்தியாவின் வெற்றி வெளிப்படுத்துகிறது” என்று பிரதமர் புகழாரம் சூட்டினார்.

இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஜனநாயகத்தின் வெற்றி மற்றும் அதிகாரமளித்தல் ஒரு பெரிய சாதனை என்று அவர் கூறினார். ஜனநாயக நாடாக இருந்துகொண்டே மனித குலத்தின் நலனே இந்தியாவின் தத்துவத்தின் மையமாக உள்ளது என்றும்  அதுதான் இந்தியாவின் அடிப்படைத் தன்மை என்றும் அவர் கூறினார்.

இந்திய மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தியதற்காகவும், இந்தியாவில் ஒரு நிலையான அரசை உறுதி செய்ததற்காகவும் அவர் பாராட்டினார். இந்தியாவின் இந்தப் பண்டைய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு இளைஞர் சக்தியாக விளங்கும் மக்கள் தொகையை அவர் பாராட்டினார்.

வரவிருக்கும் ஆண்டுகளில் உலகின் இளைய நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்றும், இந்தியா மிகப்பெரும் எண்ணிக்கையிலாஇளைஞர்களையும், ஆகப்பெரும் திறன் கொண்ட இளைஞர் குழுவையும் கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தத் திசையில் அரசு பல சாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் இளைஞர் சக்தி நமது வலிமைக்கு மற்றொரு பரிமாணத்தை சேர்த்துள்ளது என்றும், இந்தப் புதிய பரிமாணம் இந்தியாவின் தொழில்நுட்ப சக்தி மற்றும் தரவு சக்தி என்று குறிப்பிட்டார். இன்றைய உலகில் ஒவ்வொரு துறையிலும் தொழில்நுட்பம் மற்றும் தரவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர், “இந்த நூற்றாண்டு தொழில்நுட்பம் மற்றும் தரவு ஆகியவற்றின் உந்துதலைக் கொண்டுள்ளது” என்றார்.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருவதாகவும் ஜனநாயகம், மக்கள் தொகை மற்றும் தரவுகளின் உண்மையான சக்தியை இந்தியா உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக சுட்டிக் காட்டினார்.

“டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஜனநாயகமயமாக்கல் ஒவ்வொரு துறையினருக்கும் சமூகத்திற்கும் எவ்வாறு பயனளிக்கிறது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது” என்று  கூறினார்.

யு.பி.ஐ., நேரடி பலன் பரிமாற்ற அமைப்பு, அரசு இ-சந்தை(ஜெம்), டிஜிட்டல் வர்த்தகத்துக்கான திறந்த நிலை வலைப்பின்னல்  போன்ற இந்தியாவின் பல்வேறு டிஜிட்டல் முன்முயற்சிகளை மேற்கோள் காட்டிய அவர், டிஜிட்டல் சுற்றுச்சூழல்சார் அமைப்பின் சக்தியை வெளிப்படுத்தும் இதுபோன்ற பல தளங்கள் உள்ளன என்றார்.

அவற்றின் பெரும் தாக்கம் ராஜஸ்தானிலும் தெளிவாகத் தெரியும் என்று அவர் மேலும் கூறினார். நாட்டின் வளர்ச்சி என்பது மாநிலத்தின் வளர்ச்சியின் மூலமே அமைகிறது என்றும், ராஜஸ்தான் தனது வளர்ச்சியில் புதிய உச்சங்களை எட்டும்போது, நாடும் புதிய உச்சங்களை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பரப்பளவைப் பொறுத்தவரை ராஜஸ்தான் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் என்று குறிப்பிட்ட அவர், ராஜஸ்தான் மக்களின் பரந்த மனம், கடின உழைப்பு, இயல்பு, நேர்மை, கடினமான இலக்குகளை அடைவதற்கான உறுதி, தேசம் முதலில் என்ற நம்பிக்கை, நாட்டிற்காக எதையும் செய்வதற்கான உத்வேகம் ஆகியவற்றிற்காக ராஜஸ்தான் மக்களைப் பாராட்டினார்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசுகளின் முன்னுரிமை நாட்டின் வளர்ச்சியோ அல்லது நாட்டின் பாரம்பரியமோ அல்ல என்றும், ராஜஸ்தான் அதன் பாதிப்பை தாங்கிக் கொண்டது என்றும் அவர் கூறினார். ராஜஸ்தானுக்கு பெரிதும் பயனளிக்கும் வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற மந்திரத்தின் அடிப்படையில் தமது அரசு செயல்பட்டு வருவதாக அவர் மேலும் உறுதியளித்தார்.

ராஜஸ்தான் வளர்ந்து வரும் மாநிலம் மட்டுமல்ல, நம்பகமான மாநிலமும் கூட என்று குறிப்பிட்ட அவர், ராஜஸ்தானுக்கு காலத்திற்கேற்ப தன்னை எவ்வாறு தகவமைத்துக் கொள்வது என்பது தெரியும் என்று தெரிவித்தார்.

சவால்களை எதிர்கொள்வதற்கும், புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் ராஜஸ்தான் என்பது மற்றொரு பெயர் என்று அவர் கூறினார்.

சாலைகள் முதல் ரயில்வே வரை, விருந்தோம்பல் முதல் கைவினைப் பொருட்கள் வரை, பண்ணைகள் முதல் கோட்டைகள் வரை ராஜஸ்தானில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று அவர் கூறினார். ராஜஸ்தானின் இந்த வாய்ப்புகள், முதலீட்டுக்கு மிகவும் கவர்ச்சிகரமான இடமாக மாநிலத்தை உருவாக்குகிறது என்று கூறினார்.

ராஜஸ்தான் மாநிலம் கற்றலின் தரத்தையும், திறனை அதிகரிக்கும் தரத்தையும் கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட மோடி, அதனால்தான் தற்போது இங்குள்ள மணற்பாங்கான மணல் குன்றுகள்கூட மரங்களாலும் பழங்களாலும் நிரம்பியுள்ளன என்றும், ஆலிவ் மற்றும் காட்டாமணக்கு சாகுபடி அதிகரித்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

ஜெய்ப்பூரின் நீல நிற மட்பாண்டங்கள், பிரதாப்கரின் தேவா நகைகள் மற்றும் பில்வாராவின் ஜவுளி கண்டுபிடிப்புகள் ஆகியவை வேறுபட்ட பெருமையைக் கொண்டுள்ளன என்றும், மக்ரானா பளிங்கு மற்றும் கோட்டா டோரியா ஆகியவை உலகம் முழுவதும் அறியப்பட்டவை என்றும் அவர் எடுத்துரைத்தார். நாகவுரின் பான் மேத்தியின் வாசனையும் தனித்துவமானது என்றும், ஒவ்வொரு மாவட்டத்தின் திறனையும் அங்கீகரிக்க மாநில அரசு செயல்பட்டு வருவதாக கூறினார்.

துத்தநாகம், ஈயம், தாமிரம், பளிங்கு, சுண்ணாம்புக்கல், கிரானைட், பொட்டாஷ் போன்ற இந்தியாவின் கனிம வளங்களின் பெரும்பகுதி ராஜஸ்தானில் உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், இவை தற்சார்பு இந்தியாவின் வலுவான அடித்தளம் என்றும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு ராஜஸ்தான் முக்கிய பங்களிப்பு செய்கிறது என்றும் கூறினார். இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை உருவாக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதை நினைவுபடுத்தியவர், இந்தியாவின் பல பெரிய சூரியசக்தி பூங்காக்கள் இங்கு கட்டப்படுவதன் மூலம் ராஜஸ்தான் இதிலும் பெரும் பங்காற்றி வருவதாகக் கூறினார் .

பொருளாதாரத்தின் இரண்டு பெரிய மையங்களான தில்லி மற்றும் மும்பையை ராஜஸ்தான் வட இந்தியாவுடன் இணைத்துள்ளது என்று குறிப்பிட்டவர், 250 கிலோமீட்டர் தூரத்திற்கு தில்லி-மும்பை தொழில் வழித்தடம் ராஜஸ்தானில் உள்ளது என்று குறிப்பிட்டார்.

2004 முதல் 2014 வரை சுமார் 5 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளதாகவும், 2014 முதல் 2024 வரை 7 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளதாகவும் அவர் எடுத்துக் கூறினார்.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் சுற்றுலா தேக்கமடைந்திருந்தபோதிலும், இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது என்று   வலியுறுத்தினார். இந்தியாவுக்கு இ-விசா வசதி பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டிருப்பது வெளிநாட்டு விருந்தினர்களுக்கு பெரிதும் உதவியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று இந்தியாவில் உள்நாட்டு சுற்றுலாவும் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், உதான் திட்டம், வந்தே பாரத் ரயில்கள், பிரசாத் திட்டம் போன்ற திட்டங்கள் ராஜஸ்தான் மாநிலத்திற்கு பயனளித்துள்ளன என்றார். இந்திய அரசின் துடிப்புமிக்க கிராமம் போன்ற திட்டங்களால் ராஜஸ்தானும் பயனடைந்துள்ளது என்றும் அவர் கூறினார். ராஜஸ்தானுக்கும் பயனளிக்கும் வகையில் இந்தியாவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று குடிமக்களை வலியுறுத்தினார். ராஜஸ்தானின் பாரம்பரிய சுற்றுலா, திரைப்பட சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கிராமப்புற சுற்றுலா, எல்லைப் பகுதி சுற்றுலா ஆகியவற்றை விரிவுபடுத்த பெரும் வாய்ப்புகள் உள்ளன என்று அவர் கூறினார். இந்தத் துறைகளில் முதலீட்டாளர்கள் மேற்கொள்ளும் முதலீடுகள் ராஜஸ்தானின் சுற்றுலாத் துறையை வலுப்படுத்தி, தங்களது வர்த்தகத்தை வளர்க்கவும் உதவும் என்று பிரதமர் முதலீட்டாளர்களை கேட்டுக் கொண்டார்.

இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய இந்தியா முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், இந்தியாவின் பெட்ரோலியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள், மின்னணு பொருட்கள் மற்றும் சாதனை உற்பத்தி ஆகியவை உலகிற்கு பெரும் பயனளித்துள்ளன என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டில் ராஜஸ்தானில் இருந்து பொறியியல் பொருட்கள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், ஜவுளி, கைவினைப் பொருட்கள், வேளாண் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 84,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்று திரு மோடி குறிப்பிட்டார்.

இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் திட்டத்தின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருவதை வலியுறுத்திய பிரதமர், இன்று மின்னணுவியல், சிறப்பு எஃகு, ஆட்டோமொபைல்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள், சூரிய ஒளி வாகனங்கள், மருந்துகள் ஆகிய துறைகளில் மிகுந்த உற்சாகம் இருப்பதாக கூறினார். பி.எல்.ஐ திட்டம் சுமார் ரூ .1.25 லட்சம் கோடி முதலீடு செய்ய வழிவகுத்துள்ளது, சுமார் ரூ .11 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன மற்றும் ஏற்றுமதியில் ரூ .4 லட்சம் கோடி அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மின்சார வாகன உற்பத்திக்கு ஏராளமான வாய்ப்புகளுடன் வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் தொழிலுக்கு ராஜஸ்தானும் ஒரு நல்ல அடித்தளத்தை தயார் செய்துள்ளது என்று பிரதமர் வலியுறுத்தினார். மின்னணு உற்பத்திக்குத் தேவையான உள்கட்டமைப்பு ராஜஸ்தானில் உள்ளது என்றும் அவர் கூறினார். ராஜஸ்தானின் உற்பத்தித் திறனை முதலீட்டாளர்கள் நிச்சயமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திரு மோடி வலியுறுத்தினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான வரையறையை மாற்றி, அவர்கள் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகளைப் பெறுவதற்கான அரசின் முயற்சிகளை சுட்டிக் காட்டிய திரு மோடி, மத்திய அரசு சுமார் 5 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை முறையான பொருளாதாரத்துடன் இணைத்துள்ளதால், அவர்கள் கடன் பெறுவதை எளிதாக்கியுள்ளது என்றார்.

கடன் இணைக்கப்பட்ட உத்தரவாதத் திட்டம் ஒன்றையும், அரசு தொடங்கியிருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், இந்தத் திட்டத்தின் கீழ் சிறு தொழில்களுக்கு சுமார் ரூ.7 லட்சம் கோடி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த பத்தாண்டுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடன் வரத்து இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட மோடி, 2014-ல் இது ரூ.10 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இன்று அது ரூ.22 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றார். இதனால் ராஜஸ்தானும் பெரும் பயனடைந்துள்ளது என்றும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் இந்த வளர்ந்து வரும் வலிமை ராஜஸ்தானின் வளர்ச்சியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றும் அவர் கூறினார்.

Tags: India's progress can be seen in every sector! - Prime Minister ModiPM Modi
ShareTweetSendShare
Previous Post

பாலியல் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தாலும் மக்கள் எதிர்க்க மாட்டார்கள்! : நடிகை கஸ்தூரி

Next Post

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்!

Related News

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

கூட்டத்திற்குள் நோயாளி இல்லாமல் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் – திட்டமிட்டு திமுக இடையூறு செய்வதாக இபிஎஸ் புகார்!

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies