கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இரைதேடி குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை புகுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாம்பூர் கிராமத்தில் வன விலங்குகள் இரைதேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் அப்பகுதியில் சிறுத்தை நடமாடியது, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தற்போது இந்த காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.