வங்கதேசத்தில் சிறைவைக்கப்பட்டுள்ள இஸ்கான் தலைவர் சின்மய் தாஸின் உடல்நிலை மோசமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அந்த வகையில், போராட்டத்துக்கு தலைமை வகித்த இஸ்கான் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சின்மயி கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால், 2 வாரத்துக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில், சிறையில் அவருக்கு தேவையான அடிப்படை மருந்துகள் கூட வழங்கப்படாததால், சின்மய் தாஸின் உடல்நிலை மோசமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.