பாலியல் சீண்டலில் ஈடுபடுவோரை என்கவுண்டர் செய்தாலும் மக்கள் எதிர்க்கமாட்டார்கள் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
இதையடுத்து எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தவறே செய்யாதவர்கள் எல்லாம் தனிப்படை அமைக்கப்பட்டு கைது செய்யப்படுவதாக தெரிவித்தார்.
சிறப்பு குழந்தைகளுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லான சூழல் நிலவி வருவதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பாலியல் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தாலும் அதனை மக்கள் எதிர்க்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.