வருவாய் துறை செயலாளரான சஞ்சய் மல்ஹோத்ராவை ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது.
தற்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் வருவாய் துறை செயலாளரான சஞ்சய் மல்ஹோத்ராவை ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது.
வருகின்ற 11ம் தேதி ரிசர்வ் வங்கியின் ஆளுநராக அவர் பதவியேற்கவுள்ளார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.