டங்ஸ்டன் சுரங்கத்திற்கு தமிழக அரசு தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆரம்பத்தில் தமிழக அரசு எதிர்க்கவில்லை என்றும், சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.
“டங்ஸ்டன் சுரங்கத்தை நிறுத்தி வைக்கக்கோரி தமிழக பாஜக சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறிய அவர், வரும் 12-ம் தேதி மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் கூறினார். டங்ஸ்டனுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக சொல்லும் முதலமைச்சர் டாஸ்மாக்கிற்காக பதவி விலக வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.