கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ஸ்ரீ எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு குறிப்பிடத்தக்க தலைவர் என்றும் அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்பட்டவர் என்றும் கூறியுள்ளார்.
மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அவர் எப்போதும் அயராது உழைத்ததாகவும், கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்த போது உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அவர் கவனம் செலுத்தியதற்காக அவர் அன்புடன் நினைவுகூரப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். எஸ்.எம். கிருஷ்ணா சிறந்த சிந்தனையாளர் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.