மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் !
Oct 28, 2026, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் !

Murugesan M by Murugesan M
Dec 10, 2024, 04:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை இண்டி கூட்டணி கட்சியினர் கொண்டு வந்தனர்.

அதானி மற்றும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் விவகாரங்களை முன்வைத்து ஆளும் கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பரஸ்பரம் குற்றம்சாட்டியதால், மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது.

அதேசமயம், மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் பாரபட்சத்துடன் செயல்படுவதாக இண்டி கூட்டணியினர் குற்றம்சாட்டி, அவருக்கு எதிராக அவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர்.

தீர்மானத்தில் இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் சமாஜவாடி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 65 பேர் கையொப்பமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 125 எம்.பி.க்களும், இண்டி கூட்டணிக்கு 88 எம்.பி.க்களின் ஆதரவும் உள்ள நிலையில்,  எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் இந்தத் தீர்மானம் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் அவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Rajya Sabha Chairman Jagdeep Dhankhar.no-confidence motion against Rajya Sabha ChairmanINDI Alliance
Share
Tweet
SendShare
Previous Post

எஸ்.எம்.கிருஷ்ணா மறைவு – பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவது குறித்து முதல்வர் ஏன் கருத்து கூறவில்லை? – வானதி சீனிவாசன் கேள்வி!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies