100 விமானங்களை வாங்க ஆர்டர் செய்துள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா தனது விமான சேவையை பெரிய அளவில் மறுசீரமைப்பு செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தனது விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்து புதிய இடங்களுக்கு சேவை அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்தவகையில், 100 புதிய விமானங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் தற்போது ஆர்டர் செய்துள்ளது.