ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து போராடினால் எதையும் சாதிக்கலாம் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென் பாரத செய்தித் தொடர்பாளர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
வங்கதேச ஹிந்துக்களின் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்த கருத்தரங்கம் மதுரை கே.கே நகரில் நடைபெற்றது. வங்கதேச ஹிந்துக்கள் உரிமை மீட்பு குழு சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென்பாரத செய்தித் தொடர்பாளர் ஸ்ரீராம், சுவாமி ஜிதேஸ் சைதன்ய மகராஜ், ஆர்.எஸ்.எஸ் மாநகர தலைவர் மங்கள முருகன், மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார், பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென் பாரத செய்தித் தொடர்பாளர் ஸ்ரீராம், ஹிந்துக்கள் ஒருங்கிணைந்தால் அசைக்க முடியாது வெற்றி நிச்சயம் என்று தெரிவித்தார். மேலும் சிரியா நாட்டு முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி ஏன்? வங்க தேச இந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தில் தமிழன் வேறு, ஹிந்து வேறு, திராவிடன் வேறு என பேசுவதை எதிர்த்து போராட வேண்டும் என வலியுறுத்தினார்.