வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக அனைவரும் அணி திரளவேண்டும் என ஒரே நாடு பத்திரிக்கையின் ஆசிரியர் நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநில இணைச் செயலாளர் ராம ராஜசேகர் மற்றும் ஒரே நாடு பத்திரிகையின் ஆசிரியர் நம்பி நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர், பேசிய நம்பி நாராயணன், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவான கருத்தரங்கம் நடைபெற்றது என தெரிவித்தார். “வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக அனைவரும் அணி திரள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.