மாறுபட்ட இலக்கிய வரலாற்று நூல்கள் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை சிறப்பித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ‘ஒரு நூலகமே புத்தகமாக’ என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஆளுநர், ஆங்கில வழி பாடத் திட்டங்களில், தமிழ் இலக்கியங்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
மாறுபட்ட இலக்கிய வரலாற்று நூல்கள் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை சிறப்பித்துள்ளன என்று கூறிய ஆளுநர், பள்ளி கல்லூரிகளில் இதுபோன்ற இலக்கியங்கள் நடத்தப்படுவதில்லை என தெரிவித்தார்.