ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இரவு முழுவதும் மின் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத் துறையினர் அறிவித்திருந்தனர்.
மாலை 5 மணிக்கு மேல் மின் விநியோகம் செய்யப்படும் என மக்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், இரவு முழுவதும் மின்விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் இது குறித்து அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.