திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.
அதிகமானோர் மலை மீது ஏற்ற கூடாது என நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும், எனவே மகா தீபம் அன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனறும் தெரிவித்தார்.
பரணி தீபத்தன்று 300 பேர் மட்டும் மலையேர அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சேகர்பாபு கூறினார்.