மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மலர் தூவி மரியாதை செய்தார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், தமிழ் மொழியும், பாரத தேசமும் தனது உயிராக நினைத்து வாழ்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி, ‘மகாகவி’ சுப்ரமணிய பாரதியார் அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு, டெல்லி தமிழ்ச் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு, புதுடெல்லி பாரதி நகரில் அமைந்துள்ள, ‘முண்டாசு கவிஞன்’ சுப்பிரமணிய பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தோம் என தெரிவித்துள்ளார்.