தொழில் வரி உயர்வை ரத்து செய்யவும், மாநிலம் முழுவதும் சீரான குப்பை வரி விதிக்கவும் வலியுறுத்தி வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளாட்சி அமைப்புகளின் சொத்து வரி, குப்பை வரி உயர்வை கண்டித்து வணிக சங்க பேரமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், மயிலாடுதுறை நகர் பகுதியில் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகர் பகுதி முழுவதும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.