மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நினைவு இல்லத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.
மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லத்தில், அவரது சிலைக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
நினைவு இல்லத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.