சென்னையில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்ததை தொடர்ந்து வீடுகளை கணக்கீடு செய்யும் பணி தொடங்கியது.
பட்டினப்பாக்கம் அடுத்த சீனிவாசபுரத்தில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதன் 4-வது தளத்தில் உள்ள பால்கனி இடிந்து விழுந்ததில் குலாப் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
இதனையடுத்து குடிசைமாற்று வாரியம் சார்பில் வீடுகள் கணக்கீடு செய்யும் பணிக்கு அதிகாரிகள் வந்தபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய குடியிருப்புகள் கட்டி தருவதாக வாக்குறுதி அளித்தார். இதையடுத்து கணக்கீடு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.