சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பின்னர், சென்னை அடுத்துள்ள பூந்தமல்லி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடங்கியது.
சேலத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கடந்த 2013-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ரூதின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விரைந்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இவ்வழக்கு பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், அரசு தரப்பின் முதல் சாட்சியிடம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, 2 -வது சாட்சி விசாரணை வரும் 16 -ம் தேதிக்கு தள்ளி வைத்தும், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், பக்ரூதின் ஆகியோர் நீதிமன்ற காவலை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.