உலக வரலாற்றிலேயே முதன்முறையாக 400 பில்லியன் டாலர் சொத்துகளை குவித்த முதல் கோடீஸ்வரர் என்ற பெருமையை டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் தட்டிச் சென்றார்.
ப்ளூம்பெர்க் நிறுவனம் மேற்கொண்ட கணக்கெடுப்பில், எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு 440 பில்லியன் டாலரை எட்டியது தெரியவந்துள்ளது.
உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கும் பில்கேட்ஸ் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்புகளைக் கூட்டினால் கூட எலான் மஸ்கின் சொத்துக்கு ஈடாகாது என ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.