திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்தில் 7 பேர் பலியாகி உள்ள நிலையில் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், “திண்டுக்கல் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏழு பேர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குத் தகுந்த மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளவும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறேன்” என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.