நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தது தவறான முன்னுதாரணம் என தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தேவைக்கு அதிகமாக கூட்டம் சேர்ந்தால் அதை கட்டுப்படுத்த வேண்டியது காவல்துறையின் கடமை என தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பது போன்ற கதையாக உள்ளது என பதிவிட்டுள்ள தமிழிசை, தெலங்கானா மாடலும், திராவிட மாடலும் வியப்பைத்தான் அளிக்கின்றன என தெரிவித்துள்ளார்.