தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் 566 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இதனால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து 672 கன அடியாக அதிகரித்த நிலையில், அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டியது.
இதையடுத்து தற்போது மஞ்சளாறு அணையில் இருந்து 566 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் எனவும், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.