மகாராஷ்டிராவில் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர்.
மஹாராஷ்டிராவில் அபார வெற்றி பெற்று மீண்டும் மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைத்தது. கடந்த 5ஆம் தேதி முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியேற்றுக்கொண்டனர்.
அமைச்சரவை தொடர்பாக, நேற்று முன்தினம் இரவு தேவேந்திர பட்னாவிஸும், ஏக்நாத் ஷிண்டேவும் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர். இந்த ப அமைச்சரவையில் பாஜகவைச் சேர்ந்த 21 பேரும், சிவசேனாவைச் சேர்ந்த 12 பேரும், தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த 10 பேரும் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.